/* */

கோவை மாணவி தற்கொலை: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி.

Mithun Chakraborty Coimbatore-நீதிமன்ற வளாகத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

Mithun Chakraborty Coimbatore
X

Mithun Chakraborty Coimbatore

Mithun Chakraborty Coimbatore-கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது 2 நாட்கள் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக மிதுன் சக்கரவர்த்தியை அழைத்துச் சென்றனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் "வாத்தியார், கண்டிப்பாக உன்னை விட மாட்டாங்க. உனக்கு கண்டிப்பா தண்டனை கிடைச்சே தீரும்" என உக்கடம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய காவல் துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 3:47 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
 2. லைஃப்ஸ்டைல்
  உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
 3. லைஃப்ஸ்டைல்
  வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
 4. லைஃப்ஸ்டைல்
  முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
 5. இந்தியா
  மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
 6. லைஃப்ஸ்டைல்
  வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
 7. லைஃப்ஸ்டைல்
  சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
 8. உலகம்
  வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
 9. விளையாட்டு
  கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
 10. வணிகம்
  நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!