கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்
X

பல்வேறு அமைப்பினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்.

பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத சின்மயா பள்ளி முதல்வர் மீராவை கைது செய்ய வேண்டும்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது போலீசாருக்கு கிடைத்தது அதில், "யாரையும் சும்மா விடக்கூடாது" என்று குறிப்பிட்டு, ரித்துவின் தாத்தா, எலிசா சாருவின் தந்தை மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியரை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஒரே ஒருவர் மட்டும் கைதாகியுள்ளதால் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என்று கூறி, மாணவியின் பள்ளி நண்பர்கள் இன்று கோவை அரசு மருத்துவமனை முன்பு பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதனால் அரசு மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது மாணவி வீட்டின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவியின் வீட்டிற்கு முன்பும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத சின்மயா பள்ளி முதல்வர் மீராவை கைது செய்ய வேண்டும் எனவும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story