/* */

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்

காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்
X

மீரா ஜாக்சன்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜாமீன் வழங்க அரசு மற்றும் மாணவியின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி குலசேகரன், மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

Updated On: 24 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  செல்லூர் ராஜூ நகர்வின் பின்னணி என்ன?
 2. தேனி
  என்னை தாண்டி தொட்டுப்பார்...! பிரதமர் மோடி ஆவேசம்....!
 3. தேனி
  விபத்தில் அதிபர் மரணம்...இனி என்ன ஆகும் ஈரான்?
 4. திருத்தணி
  முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!
 5. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 6. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 7. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 8. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 9. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 10. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்