Coimbatore News In Tamil கோவை மாநகரில் வீட்டில் விபச்சாரம் செய்த அழகிகள் : 3 பேர் கைது

Coimbatore News In Tamil  கோவை மாநகரில் வீட்டில் விபச்சாரம்  செய்த அழகிகள் :   3  பேர் கைது
X
Coimbatore News In Tamil முன்பெல்லாம் ஹோட்டல், லாட்ஜ்களில் நடந்து வந்த விபச்சாரம் தற்போது நவீனமாகியுள்ளது. வீடுகளை வாடகைக்கு எடுத்து நடத்துவது அதிகரித்துள்ளது. கோவையில் நடந்ததும் இப்படித்தான்.


Coimbatore News In Tamil

தமிழகத்தினைப் பொறுத்தவரை போலீஸ் என்னதான் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தாலும் அதனையும் மீறி குற்றச்செயல்கள் நடப்பது என்பது ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் வீட்டில் வைத்தே விபச்சாரம் செய்த 3 அழகிகளைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் நடப்பதுதான் விபச்சாரம். முன்பெல்லாம் ஹோட்டல்களில், லாட்ஜ்களில் விபச்சாரம் செய்வார்கள். நாளடைவில் இதனை போலீசார் கண்காணிக்க துவங்கிவிட்டதால் நுாதன முறையாக வீடுகளை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டினுள் விபச்சாரம் செய்வதால் பலருக்கும் தெரியாது என்ற நப்பாசையில் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்களும் பாதிப்படைந்து வருவது தொடர்கிறது. என்னதான் வீட்டு உரிமையாளர்களும் வீடுகளை வாடகைக்கு விடும்முன் தோண்டி தோண்டி கேள்விகள் கேட்டாலும் அனைத்திற்கும் சந்தேகமே வராத படி பதில் அளித்து சாமார்த்தியமாக உள்ளூர் புரோக்கர்களை வைத்து வீடுகளை பிடித்து விடுகின்றனர்.

வீடுகளை வாடகைக்கு பிடித்து விபச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. கோவையில் வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த மூன்று புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சாரம் இப்போது நூதனமான முறையில் நடக்கிறது. அதுவும் அபார்ட்மென்ட் வீடுகளை வாடகைக்கு எடுத்து நடத்துவதால் பலருக்கும் தெரியாத நிலையாகிவிடுகிறது. மேலும் சொகுசு விடுதிகளில் அவ்வப்போது நடப்பதும், அதை கேள்விப்பட்டு போலீசார் கைது செய்வதும் நடக்கிறது. இதேபோல் தமிழகத்தின் பல இடங்களில் மசாஜ் என்ற பெயரிலும், ஸ்பா என்ற பெயரிலும் விபச்சாரம் நடக்கிறது. இதுகுறித்து தகவல் வெளியான உடன் போலீசார் தேடி சென்று கைது செய்கிறார்கள்.

Coimbatore News In Tamil



விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் போலீசார், புரோக்கர்களை சிறையில் அடைக்கிறார்கள். இந்நிலையில் போலீசாரை ஏமாற்றுவதற்காக வீடுகளில் வைத்தும் இப்போது விபச்சாரம் நடக்கிறது. குடும்பமாக வந்து குடியேறி விபச்சாரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதையும் போலீசார் கண்டுபிடித்து புரோக்கர்களை கைது செய்கிறார்கள். அந்த வகையில் கோவை சின்னவேடம்பட்டி அருகே வீட்டில் விபசாரம் நடத்திய 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர்,சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் சின்னவேடம்பட்டி அன்னை பாத்திமா நகர் அருகே நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு மூன்று பேர் வந்து நைசாக பேச்சுக் கொடுத்த 3பேரும், இங்குள்ள ஒரு வீட்டில் அழகான பெண்கள் உள்ளனர், நீங்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று அவரிடம் கேன்வாஸ் செய்துள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.1,000-ஐ பறித்து சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், அந்த பகுதிக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சின்னவேடம்பட்டியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பணத்தை பறித்த புரோக்கர்கள்

கோவையில் ஆட்டோ டிரைவரிடம் இருந்து பணத்தை பறித்தது புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி(வயது 50), செல்வகுமார்(39), தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகன்(45) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னை, பெங்களூரு மற்றும் தர்மபுரியை சேர்ந்த 3 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஐந்தாவது விதியில் உள்ள அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அக்டோபர் 3ம் தேதி ஆய்வு நடத்தினர். அப்பொழுது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 27 வயதான ஜெயபிரகாஷ், 22 வயதான பாண்டித்துரை, 27 வயதான நவீன் குமார், ஆகிய மூன்று பேரை கைது செய்ததுடன் மூன்று அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி