கோவை மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க போவது யார்: திமுகவா ? அதிமுகவா ? கடும் போட்டி

கோவை மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க போவது யார்: திமுகவா ? அதிமுகவா ? கடும் போட்டி
X

கோவை மாநகராட்சி அலுவலகம்

கோவை மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக இடையே கடும் போடடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மொத்தம் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாநகராட்சி வார்டு மெம்பர் பதவிக்கு போட்டியிடுவோர் வார்டுகள் உள்ள மண்டல அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1981ம் ஆண்டு 72 வார்டுகளுடன் கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1996ம் ஆண்டு முதல்முறையாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மேயராக பதவி வகித்தார்.2001ம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த தா.மலரவன் மேயரானார். 2006ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காலனி வெங்கடாசலம் மேயராக முதல் முறையாக மறைமுகமாக மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2011ம் ஆண்டு நேரடி தேர்தல் அதிமுகவை சேர்ந்த செ.ம.வேலுசாமி மேயரானார். 2014ம் ஆண்டில் வேலுசாமி பதவி பறிக்கப்பட்டு, நேரடி தேர்தல் மூலம் கணபதி ராஜ்குமார் மேயரானார்.

இதுவரை திமுக. கூட்டணியில் இருந்த த.மா.கா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மேயர் பதவியை வழங்கி உள்ளது. அதிமுக இதுவரை 4 முறை நேரடியாக களமிறங்கி, 3 முறை வென்றுள்ளது. இந்த முறை கோவையில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக களமிறங்குகின்றன.

திமுகவில் முன்னாள் துணை மேயர் கார்த்திக்கின் மனைவி, இளஞ்செல்வி கார்த்திக், மகளிரணி பொறுப்பாளரான மீனா ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் மீனா லோகு, நிவேதா சேனாதிபதி ஆகியோர் மாமன்ற உறுப்பினர்களாக வென்றால் மேயராகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறஅதிமுகவில் இளம் பெண்கள் பாசாறை நிர்வாகியான ஷர்மிளா சந்திரசேகர், செளமியா அன்பு ஆகியோருக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இறுதி செய்யும் நபரே மேயராகும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகள் மேயர் பதவியை கேட்க வாய்ப்புள்ளது. ஆனாலும் இம்முறை கோவையில் போட்டியிட திமுக உறுதியாக உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக கோவை மாநகராட்சியை கேட்க வாய்ப்புள்ளது. வழங்கப்பட்டால் மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி, முன்னாள் பாஜக மாமன்ற உறுப்பினர் வத்சலா ஆகியோருக்கு வாய்ப்புள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!