கோவை - கரூர் 6 வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் மனு
மனு அளிக்க வந்த விவசாயிகள்.
கொங்கு மண்டல விவசாயிகள் பாதுகாப்பு குழுவினர், கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவை அளித்தனர். அதில் கரூர் முதல் கோவை வரையிலான 6 வழி பசுமை வழித்திட்டம் மற்றும் அதனுடன் இணைந்த எட்டிமடை முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரையிலான கோவை கிழக்கு புற வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்தனர். விவசாய நிலங்களில் அமையும் இத்திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 3 ஆயிரம் விவசாயிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு தனித்தனியாக கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும், 3000 ஏக்கர் நிலங்களை பாதுகாத்து, மக்கள் வரிப்பணம் 3000 கோடி ரூபாய் வீணாவதை தடுக்கக்கோரி, 3 ஆயிரம் விவசாயிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு நகலை, கலெக்டரிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu