கோவை மாநகராட்சி தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் விருப்ப மனு தாக்கல்

கோவை மாநகராட்சி தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் விருப்ப மனு தாக்கல்
X

விருப்ப மனு அளித்த மமகவினர்

போட்டியிடும் வார்டுகள் தொடர்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மனிதநேய மக்கள் கட்சி கோவை மாவட்ட தலைமையகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை நடைபெற்றது. இதில் ஏராளமான வார்டுகளில் விருப்ப மனுக்கள் மனிதநேய மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார்கள். கோவை மாநகராட்சி 77, 78, 79, 82, 84, 86, 95, 88 மற்றும் சூலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 2, 3, 4, 5 6 உள்ளிட்ட வார்டுகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் விருப்ப மனுக்களை மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமரிடம் வழங்கினர். இதில் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சியில் போட்டியிடும் வார்டுகள் தொடர்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக ஒதுக்கும் இடங்களில் மமக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி