உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கோவை ஆட்சியர் துவக்கி வைப்பு

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கோவை  ஆட்சியர் துவக்கி வைப்பு
X

எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்.

ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் எச்.ஐ.வி., என்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு, 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேரணியை தொடங்கி வைத்தார். 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார். முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!