கோவை: பாஜக நிர்வாகி கடையின் மீது பாட்டில் குண்டு வீச்சு

கோவை: பாஜக நிர்வாகி கடையின் மீது பாட்டில் குண்டு வீச்சு
X

பாட்டில் குண்டு வீசப்பட்ட கடை.

Bottle Bomb -கோவை 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி கடையின் மீது பாட்டில் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Bottle Bomb -கோவையில் பாஜக அலுவலகம் உள்ளிட்ட இருவேறு இடங்களில் நேற்று பாட்டில் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை 100 அடி சாலையில் மற்றொரு பாஜக நிர்வாகியின் கடையின் மீதும் பாட்டில் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நேற்று இரவு 8.30 மணியளவில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வாசலில் பாட்டில் குண்டு வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றிலும் பாட்டில் குண்டு வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் 5 தனி படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சூழலில் கோவை 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை ஷட்டரில் பாட்டில் குண்டு அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. நேற்று இரவு வீசப்பட்டு இருக்கலாம் என கூறப்படும் நிலையில் இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த போது பாட்டில் குண்டு வீசப்பட்டது தெரியவந்துள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவையை அடுத்த பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாட்டி குண்டு வீசப்பட்ட சம்பவம் மாநகரத்திலும் புறநகர் பகுதிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!