கோவையில் ஆவின் பொருட்கள் விற்பனை மோசடி: இருவர் பணியிடை நீக்கம்

கோவையில் ஆவின் பொருட்கள் விற்பனை மோசடி: இருவர் பணியிடை நீக்கம்
X

பைல் படம்.

Coimbatore News Today in Tamil - கோவை ஆவினில் பொருட்களை பணம் வாங்காமல் விற்பனை செய்த மோசடியில் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Coimbatore News Today in Tamil - கோவை பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் தலைமை பால் நிறுவனத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொருட்களை இருப்பு விற்பனை குறித்த கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த போது ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பணம் வாங்காமல் விற்பனை செய்யப்பட்டதும், இது குறித்த வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸில் விசாரணை உள்ளது.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்ட நிலையில், ஆவின் உப பொருட்கள் விற்பனை அதிகாரி சுஜித்குமார், மண்டல பால் விற்பனை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே30 ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட தீடீர் சோதனையின் போது பணி நிரந்தரம் செய்ய பெறப்பட்ட ரூ.8.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு முதுநிலை உதவியாளர் கிருஸ்ணமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!