கோவையில் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்த முதல்வர்
கண்காட்சியை திறந்து வைத்த முதல்வர்.
கோவை வ.உ.சி. மைதானத்தில், தொல்லியல் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தொல்பொருட்கள் கண்காட்சி, தமிழக அரசின் ஓராண்டு சாதனையின் ஓவிய கண்காட்சியை தமிழக முதலவர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் கீழடி வைகை நதிக்கரையில் நகர நாகரிகம், பொருநை ஆற்றங்கரை நாகரிகம், கொடுமணல் சங்க காலத் தொழிற்கூடம், மயிலாடும்பாறை 4200 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலப் பண்பாடு, ஆகியவை குறித்த தொல்பொருட்கள் கண்காட்சி காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
அதே போல தமிழக அரசின் ஓராண்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், சாதனைகள் உள்ளிட்டவை விளக்கிடும் ஓவியக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளதை முதலமைச்சர் பார்வையிட்டார். இந்த கண்காட்சி திறப்பு விழாவில் அமைச்சர்கள் தென்னரசு,சாமிநாதன், செந்தில் பாலாஜி, கயல்விழி மற்றும் நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர் ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு சென்றபின் தொடர்ந்து துர்கா ஸ்டாலின் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து கோவை, அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் தொழில் முனைவோர்களுடன் முதல்வர் கலந்துரையாடவுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu