கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
X
கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சான்றிதழ் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரி நாராயணன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பது மற்றும் குற்றச் செயல்கள் நடவாமல் தடுப்பது பற்றியும் மற்றும் கோவை மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக மாற்றுவது குறித்தும், மாவட்டத்தில் தற்போது வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் இருப்பு நிலை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை புலன் விசாரணை செய்து விரைந்து எதிரிகளை கைது செய்வது பற்றியும் அனைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள்,காவல் அதிகாரிகள் மற்றும் சிறப்பு தனிப்பிரிவு காவல்துறையினருடன் கலந்தாலோசித்தார்.

இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த (ஆகஸ்ட்) மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆதாய கொலை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த துணைக் காவல் கண்காணிப்பாளர்-1, காவல் ஆய்வாளர்கள்-6, உதவி ஆய்வாளர்கள்-18, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்-4 மற்றும் தலைமை காவலர்கள், மு.நி.காவலர்கள், காவலர்கள் -43 என மொத்தம் 72 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டு சான்றிதழ் வழங்கி, சிறப்பித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!