கோவை குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோவை குளங்களில் உள்ள  ஆகாயத்தாமரை   அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?   பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
X

கோவை மாநகராட்சிஆபீசின்   முகப்பு தோற்றம் (கோப்பு படம்)

cbe public demand ,removal of water hyacinth கோவை மாநகராட்சிப் பகுதி குளங்களில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

cbe public demand ,removal of water hyacinth

கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள குளங்களை மாசுப்படுத்திக்கொண்டிருக்கும் ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பினை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எப்போது அகற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் உள்ளனர்.

தேங்கியுள்ள ஆகாயத்தாமரை

கோவை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட உக்கடம்பெரியகுளம்,செல்வ சிந்தாமணி குளம், வாலாங்குளம் குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன.கோவை மாநகராட்சியானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருவதால் பல புனரமைப்பு பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகிறது.

cbe public demand ,removal of water hyacinth


கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பெரிய குளத்தில் தேங்கிக் கிடக்கும் ஆகாயத்தாமரைகள் (கோப்பு படம்)

cbe public demand ,removal of water hyacinth

மேற்சொல்லப்பட்டகுளங்களில் முத்தண்ணன் குளம், வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம் உள்ளிட்ட குளங்களில் தேங்கிக் கிடந்த ஆகாயத்தாமரைகள் அனைத்தும் நவீன இயந்திரங்களைக் கொண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அகற்றப்பட்டன.

இக்குளங்களைச் சுற்றி நடைப்பாதை, பூங்கா, மிதிவண்டிசெல்ல தனிப்பாதை, சிறுவர்கள் விளையாடும் வகையில் பல்வேறு விளையாட்டுஉபகரணங்கள், பொதுமக்கள் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் காட்சி கோபுரங்கள், அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குளங்களிலும் பல மாதங்களாக தேங்கிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற மாநகராட்சி அதிக செலவினைச் செய்து வருகிறது-

இவ்வாறு அகற்றப்பட்டாலும் மீண்டும் குளங்களில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து ஆக்கிரமிப்பதால் தண்ணீரின் துாய்மை கெட்டுவிடுகிறது. எனவே இதனை நிரந்தரமாக அகற்றத் தேவையான நடவடிக்கையினை மாநகராட்சி நிர்வாகமானது மேற்கொள்ள வேண்டும்.

cbe public demand ,removal of water hyacinth


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் பார்க் மற்றும் பல்வேறு வகையான நவீன வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. (கோப்பு படம்) குளத்து தண்ணீர் சுத்தம் தேவையே?

cbe public demand ,removal of water hyacinth

இதுகுறித்துபொதுமக்கள்,சமூகஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கும்போது, ஊட்டி ஏரியில் இதுபோன்றுதான் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் காணப்பட்டன. ஆனால் அவற்றினை அகற்ற பணியாளர்கள் தினந்தோறும் ஈடுபடுவதால் அதனை வளரவிடாமல் அவ்வப்போது அகற்றி விடுகின்றனர்.அதுபோன்று கோவை மாநகராட்சி சார்பில் இந்த குளங்களில் நிரந்தரமாக வளர்ந்து வரும் ஆகாயத்தாமரையினையும் அகற்ற தேவையான நடவடிக்கையினை மாநகராட்சி மேற்கொள்ளவேண்டும்.

கேரள மாநிலத்தில் ஆகாயத்தாமரைகள் வளராமல்இருக்க ஒரு சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி என பெயரளவில் சொல்லப்பட்டாலும் இதுபோன்ற ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக இருந்தால் அதனைச்சுற்றியுள்ள வளாகத்தினை பல லட்சக்கணக்கில் துாய்மைப்படுத்தியும் எந்தவித பிரயோஜனமும் இருக்காது என்று தெரிவித்தனர். எனவே மாநகராட்சி மேயர், மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து நிரந்தர நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil