ரயிலில் வட மாநில இளைஞரிடம் ரூ. 30 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா?

ரயிலில் வட மாநில இளைஞரிடம் ரூ. 30 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா?
X
கோவையில், ரயிலில் வட மாநில இளைஞரிடம் ரூ. 30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது, ஹவாலா பணமா என விசாரணை நடைபெறுகிறது.

தன்பாத்திலிருந்து, கோவை வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் நேற்று இரவு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில், போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில், ரூ 30 லட்சம் பணம் இருந்தது. அதற்குரிய ஆவணங்கள் அந்த வாலிபரிடம் இல்லை. தொடர்ந்து அந்த வாலிபரை அதே ரயிலில் ஆர்பிஎப் போலீசார் கோவை அழைத்து வந்தனர். பின்னர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லால் சிங் ராவ் என்பதும், சென்னையில் இருந்து ரயிலில் ஏறியதும் தெரியவந்தது.

கோவைக்கு தங்க நகை வாங்க வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ரூ 30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் ரேஸ் கோர்சில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!