பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான விமானப்படை அதிகாரியை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான விமானப்படை அதிகாரியை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
X

லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக்.

இந்திய விமானப் படை சட்டம் 1950 படி பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமானப்படைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார்.

கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பயிற்சிக்காக வந்த 28 வயது பெண் அதிகாரியை, லெப்டினல் அமித்தேஷ் ஹர்முக் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு இந்திய விமானப் படை சட்டம் 1950 படி பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமானப்படைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார்.

இந்நிலையில் கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் விமானப்படை அதிகாரி அமித்தேஷ் ஹர்முக்கினை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட விமான படை அதிகாரி அமித்தேஷ் ஹர்முக்கினை கோவை மாநகர போலீசார் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே அமித்தேஷ் ஹர்முக் இருப்பார் எனவும், காவல் துறையினர் முன் கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு விமான படை அதிகாரியை விசாரிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை விசாரணை நடத்த விமானப்படை கல்லூரி வளாகத்தில் சூல்நிலை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், காவல் துறை விசாரணையின் போது இந்திய விமான படை அதிகாரிகள் இடையூறு செய்யக்கூடாது எனவும், இரு விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒரு அறிக்கை விமான படை விசாரணை குழுவிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!