திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் மீது வழக்குப்பதிவு

திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் மீது வழக்குப்பதிவு
X

பந்தயசாலை காவல் நிலையம்.

திருநங்கையின் வீட்டிற்கு நேரடியாக விசாரணைக்குச் சென்ற காவலர் மூவேந்தன் வேல்பாரி பாலியல் தொல்லை அளித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது திருநங்கை. இவர் தனது செல்போன் களவு போனது தொடர்பாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அவரது வீட்டிற்கு நேரடியாக சென்ற காவலர் மூவேந்தன் வேல்பாரி (50) என்பவர் விசாரணை செய்துள்ளார். அப்போது, திருநங்கையிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தான் அழைக்கும் போது செல்போனை எடுக்க வேண்டும்; அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும் எனவும் அவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருநங்கை இது தொடர்பாக மீண்டும் சி2 காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் காவலர் மூவேந்தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் வசித்து வரும் திருநங்கைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்