குனியமுத்தூர் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: பொதுமக்கள் அவதி

குனியமுத்தூர் பகுதியில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை: பொதுமக்கள் அவதி
X

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.

முன்னாள் அமைச்சர் வீட்டு முன்பு பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கப்பட்ட நிலையில், சரியாக மூடப்படாத்தால் சாலைகளில் பள்ளம்.

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு அமைந்துள்ளது. இவர் வீடு அமைந்து இருக்கும் சாலையில் சமீபத்தில் பாதாள சாக்கடைக்கான குழாய்கள் பதிக்கப்பட்டது. குழாய் பதிக்கப்பட்ட பின்னர் சாலையில் மண்ணை சரியாக மூடப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் இந்த சாலைகளில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு வருகின்றது.

பாதாள சாக்கடை குழாய் அருகே இருக்கும் குடிநீர் குழாய் ஒன்றும் உடைந்து சேதமானதை அடுத்து, அக்குழிகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் அருகே சாலையை முறையாக சரி செய்யாமல் கிடப்பில் போட்டு வைத்து இருப்பதாகவும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். மாநகர துணை மேயர் வெற்றிசெல்வனின் அலுவலகம், இதே பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அவசரமாக அப்பகுதியை சீரமைத்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்