சட்டையை அயர்ன் செய்து வாக்கு சேகரித்த பாஜக தலைவர் அண்ணாமலை

சட்டையை அயர்ன் செய்து வாக்கு சேகரித்த பாஜக தலைவர் அண்ணாமலை
X

அயர்ன் செய்து வாக்கு சேகரித்த  அண்ணாமலை

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபாஜக மாநில தலைவர் அண்ணாமலை சட்டையை அயர்ன் செய்து வாக்கு சேகரித்தார்

கோவை மாநகராட்சி பகுதிகளான ஆவாரம்பாளையம் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தெரிவித்தவர், அவற்றை எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், நீட் தேர்வு சமூகநீதியோடு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், சிறுபான்மையின மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, காமராஜர்புரத்தில் உள்ள துணி சலவை மற்றும் அயர்ன் கடையில் அண்ணாமலை ஒரு சட்டையை அயர்ன் செய்து பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!