தமிழ்நாட்டில் திமுகவிற்கு மாற்று கட்சி பாஜகதான்: முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் திமுகவிற்கு மாற்று கட்சி பாஜகதான்: முன்னாள் எம்பி ராதாகிருஷ்ணன்
X

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் திமுகவிற்கு மாற்று கட்சி பாஜகதான் என்று தெரிவித்தார் முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் திமுகவிற்கு மாற்று கட்சி பாஜகதான் என முன்னாள் எம்பி சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையை பொறுத்தவரையில் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள பவர் ஹவுஸ் பகுதியில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் எம் பி சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர் . 300க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் முன்னாள் எம்பி சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சிபி ராதாகிருஷ்ணன் : கூட்டத்தில் சிலர் மட்டுமே முக கவசம் அணிந்திருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது பிரதமர் மோடி கொடுத்த தடுப்பூசி தங்களுக்கு கூட்டத்திலும் அருகருகே அமர்ந்து கொள்ளும் அளவிற்கு நம்பிக்கையும் தைரியத்தையும் கொடுத்துள்ளதாக அவர் பதிலளித்தார். ஊழலிலேயே பிறந்து ஊழலிலேயே வளர்ந்ததாகக் திமுக என குற்றம் சாட்டினார். மேலும் திமுகவிற்கு தமிழ்நாட்டில் மாற்றுக் கட்சி என்றால் அது பாஜகதான் என அவர் கூறினார் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!