கோவையில் கைக்குழந்தையுடன் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

கோவையில் கைக்குழந்தையுடன் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
X

கைக்குழந்தையுடன் வாக்கு சேகரித்த சிந்துஜா.

கோவை மாநகராட்சியில் 61 வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளராக இளம் பட்டதாரி பெண்ணான சிந்துஜா போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க. தனியாக தேர்தலை சந்திக்கிறது.

இதில்100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சியில் 61 வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளராக இளம் பட்டதாரி பெண்ணான சிந்துஜா தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட வீட்டின் அருகே கள்ளிமடை பகுதியில், வீடு வீடாக தனது கைக்குழந்தையுடன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

தாம் வெற்றி பெற்றால் நீண்ட நாட்களாக இந்த பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னை, பஸ் போக்குவரத்து, சாலை வசதி மேம்படுத்துவது, கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!