முகத்தை சேதப்படுத்திய 'அழகு' நிலையம்; கோவையில் நிகழ்ந்த துயரம்

முகத்தை சேதப்படுத்திய அழகு நிலையம்; கோவையில் நிகழ்ந்த துயரம்
X

கோவையில், கல்லுாரி மாணவரின் முகத்தை சேதப்படுத்திய ப்யூட்டி சலுான்

Mens Beauty Salon - கோவையில், அழகுநிலையம் சென்ற கல்லுாரி மாணவர் முகத்தில், வெந்நீர் கொட்டியதால் முகம் வெந்து சேதமானது.

Mens Beauty Salon -கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர், அப்பகுதியில் உள்ள ஒரு ஆண்கள் அழகுநிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர் முகத்தை அழகுபடுத்த, நீராவி பாத் எடுக்கப்பட்டது.அப்போது கொதித்துக்கொண்டு இருந்த, வெந்நீர் அந்த மாணவரின் முகத்தில் கொட்டியதால், முகம் வெந்தது. மாணவர் வலியால் அலறி துடித்தார்.


உடனே அங்கிருந்த ஊழியர், சாதாரண கிரீமை எடுத்து அந்த காயத்தில் போட்டுவிட்டு மாணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து பெற்றோர் அந்த மாணவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அழகுநிலைய உரிமையாளர் சஞ்சய்தாஸ், ஊழியர் வித்யாதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி