/* */

மண் வளத்தின் அவசியம்: ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் விழிப்புணர்வு பாடல்

கோவை மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் பாடல் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

மண் வளத்தின் அவசியம்: ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் விழிப்புணர்வு பாடல்
X

மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் பாடல் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அழிந்து வரும் மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விதமாகவும் 'மண் காப்போம்' என்ற உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை, கோவை ஈஷா யோக மைய நிருவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார்.

மக்களுக்கு மண் வளம் காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக லண்டனில் இருந்து தமிழ்நாடு வரை 3 கண்டங்கள் மற்றும் 27 நாடுகளுக்கு 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கோவை ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியின் மாணவர்கள் 40 பங்கேற்று நடத்தினர். இதில் பாரம்பரிய கலையான களரியின் மூலமும், ஃப்ளாஸ் மாப் நடனத்தின் மூலமும் மக்களுக்கு மண் வளம் மற்றும் மண் வளம் காக்க வேண்டிய அவசியத்தை எடுத்து கூறியதுடன் ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு மண் வளம் காப்பது தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கூறுகையில், "மண் வளம் என்பது உலகளவில் வேகமாக அழிந்து வருகிறது. ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (UNFAO) தற்போது நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், உலகில் மேற்பரப்பு மண்ணின் வளம் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் முற்றிலும் காணாமல் போய்விடும் என எச்சரித்துள்ளது.

மேலும், சர்வதேச விஞ்ஞானிகள் 2045-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 930 கோடியாக அதிகரித்து விடும் எனவும், அதேசமயம், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்து விடும் அபாயம் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது. எனவே, நாம் நம் தாய் மண்ணை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டு கொண்டனர்.

Updated On: 7 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
 2. லைஃப்ஸ்டைல்
  அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
 3. லைஃப்ஸ்டைல்
  வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
 4. ஆன்மீகம்
  விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
 5. லைஃப்ஸ்டைல்
  பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
 6. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 7. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
 9. கும்மிடிப்பூண்டி
  குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
 10. ஈரோடு
  சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்