/* */

பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது: புகழேந்தி

Today Political News in Tamil - நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஐ தாக்குவதற்கு திட்டம் தீட்டி உள்ளனர் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது: புகழேந்தி
X

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி.

Today Political News in Tamil - கோவையில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும் ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 23 பொதுக்குழு தீர்மானங்களில் எந்தவித திருத்தமும், வேறு எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனவும், 23 தீர்மானமும் நிரகரிக்கபடுகின்றது என்றால், அதிமுக நிர்வாகிகள் 10 நாட்களாக உட்கார்ந்து எதற்கு இவற்றை தேர்வு செய்தனர் என கேள்வி எழுப்பினார்.

சி.வி.சண்முகத்திற்கு அதிமுகவில் இருப்பவர்கள் பயப்படுகின்றனர் எனவும் டிசம்பர் 1 ம் தேதி செயற்குழுவில் 43- விதியின் படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 5 வருடத்திற்கு தொடரலாம் எனவும் கூறினார். மேலும் இரு பதவிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது எனவும், இதை யாராலும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார். எம்ஜிஆர் கொண்டுவந்த பைலாவில் கை-வைத்து தான் இன்று ரோடுரோடாக அலைகின்றனர் என விமர்சித்த புகழேந்தி, அனைத்து பதவிகளும் போய்விட்டது என சிவி சண்முகம் கூறுகிறார் என்றால் தேர்தெடுக்கப்பட்ட அத்தனை பேரும் காலியா? எனவும் கூறினார்.

ஓ பி எஸ் 11 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்து முதல்வராக அமர வைத்தற்காக அவர் மீது தாக்குதல் நடத்திறார்களா, விடிய விடிய பேச்சு வார்த்தை நடத்தி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி என அறிவித்தாரே அதற்காக அடியா? என கேள்வி எழுப்பினார். அனைத்தையும் விட்டு கொடுத்த ஓபிஎஸ்-க்கு ஒருநாள் செக் வைப்பார்கள் என ஓராண்டுக்கு முன்பே தான் கூறியதை குறிப்பிட்ட புகழேந்தி பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தி இருக்கின்றனர் என்றார். பழனிச்சாமிக்குதான் அறிவில்லை. வேலுமணிக்கும் அறிவல்லையா?. என கேள்வி எழுப்பினார்.

டிசம்பர் 1 ம் தேதி செயற்குழுவின் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கின்றனர் என கூறிய அவர் அப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றால் சிவி சண்முகத்திற்கு வழங்கப்பட்ட பதவியும் இருக்காது எனவும் இதற்கு நீதி மன்றம் செல்வோம் என தெரிவித்தார்.

கூட்டத்தில் வேலுமணி திமுகவை எச்சரிக்கிறேன் என எதற்கு பேசினார் என தெரியவில்லை எனக்கூறிய புகழேந்தி ஊரே சிரிக்கிறது எனவும் நேற்று, காவல் துறை ஏமாந்து இருந்தால் ஒ.பி.எஸ், வைத்தியலிங்கம் ஆகியோர் தாக்கப்பட்டு இருப்பார்கள் என தெரிவித்தார். எம்ஜிஆர் ,ஜெயலலிதா வளர்த்த கட்சியை இன்று மக்கள் காரி துப்புகிறார்கள் எனவும் எல்லார் பதவியும் பறிபோக சி.வி .சண்முகம்தான் காரணமாக அமைகிறார் என தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமானப்படுத்தி இருக்கின்றனர் எனவும் ஓ.பி.எஸ், ஒருங்கிணைப்பாளர்,நீதிபதி அனுமதி கொடுத்த தீர்ப்பை தூக்கி எறிந்துள்ளார்கள் எனவும் ஓ.பி.எஸ் தரப்பு மீது தாக்குதல் நடத்த பெருமளவு திட்டமிட்டனர் எனவும் குற்றம் சாட்டினார். தமிழக முதல்வர், போலீசார் கவனமாக இருத்ததால் தப்பித்துள்ளனர் எனவும் தெரிவித்தார். பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது என குற்றம் சாட்டியவர், 11 ம் தேதி பொதுக்குழு கூடாது என தெரிவித்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jun 2022 9:42 AM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  செல்லூர் ராஜூ நகர்வின் பின்னணி என்ன?
 2. தேனி
  என்னை தாண்டி தொட்டுப்பார்...! பிரதமர் மோடி ஆவேசம்....!
 3. தேனி
  விபத்தில் அதிபர் மரணம்...இனி என்ன ஆகும் ஈரான்?
 4. திருத்தணி
  முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!
 5. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 6. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 7. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 8. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 9. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 10. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்