கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது
X
கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்

கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்டவர்கள் கைது செய்ப்பட்டனர்.

சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு எதிர்முனையில் பெண்கள் போல் பேசி அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 27.07.2022 -ஆம் தேதி கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரவீன் (25) என்பவர் தனது வேலை முடிந்து வரும் போது தனது செல்போனிற்கு வந்த அழைப்பின் அடிப்படையில் சூலூர் நாகமநாயக்கன்பாளையம் பகுதிக்கு சென்றபோது ஒரு பெண் மற்றும் அவருடன் இருந்த மற்ற 3 நபர்களும் சேர்ந்து பிரவீனை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, இருசக்கர வாகனம் ஆகிவற்றை பறித்து சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக சூலூர் காவல் நிலையத்தில் பிரவீன் கொடுத்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் . ராஜேந்திர பிரசாத், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வழிப்பறியில் ஈடுபட்ட சூலூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (20), ராஜேஷ் குமார் (24), இளந்தமிழன் (29) மற்றும் சுரேஷ் (23) ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து அவர்கள் வழிப்பறி செய்த நான்கு சக்கர வாகனம் -2 மற்றும் செல்போன்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்ற ஆஜர் படுத்திய பின்பு சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!