நீதியரசர் கற்பக விநாயகத்தின் 50 ஆண்டுகால சட்டப்பணிக்கு பாராட்டு விழா

நீதியரசர் கற்பக விநாயகத்தின் 50 ஆண்டுகால சட்டப்பணிக்கு பாராட்டு விழா

கோவையில் நீதியரசர் கற்பக விநாயகத்திற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நீதியரசர் கற்பக விநாயகத்தின் 50 ஆண்டுகால சட்டப்பணிக்கு பாராட்டு விழா கோவையில் நடத்தப்பட்டது.

முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட கழகத்தின் கெளரவ தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் சட்டத்துறையில் வழக்கறிஞராக, நீதிபதியாக தலைமை நீதிபதியாக கடந்த 50 ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து வருகிறார்.

அவரது சட்ட பணிகளை போற்றும் விதத்தில் அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. நீதியரசர் எம். கற்பகவிநாயகம் தேவகோட்டையில் பிறந்தவர். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அது அவருக்கு மன உளைச்சல் தந்த காரணத்தால் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார். அப்போது அவருக்கு மகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகம் கிடைத்தது.

அதை படித்த அவர் தனது முடிவை மாற்றி கொண்டு பள்ளி படிப்பை தொடர்ந்தார். தனது விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் பள்ளி கல்வி மற்றும் கல்லூரி சட்ட படிப்பை படித்து முடித்தார். அவருடைய இளமை காலத்தில் நாடகங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க முயற்சிகள் மேற்கொண்டார். அப்போது முதல்வராக இருந்த எம். ஜி. ஆரின் நட்பு கிடைத்தது. அப்போது தனது நடிப்பு ஆசையை அவர் எம் ஜி ஆரிடம் தெரிவித்தார்.

அதற்கு அப்போது முதல்வராக இருந்த எம.ஜி.ஆர். அவரிடம் நீங்கள் நீதித்துறையின் சிறந்த இடத்தை அடைந்து சாதிக்க வேண்டும். ஆகவே திரை துறையை தேர்வு செய்யாமல் நீதி துறையை தேர்வு செய்ய வேண்டும் என்றார். அதனை ஏற்றுக் கொண்ட நீதியரசர் கற்பகவிநாயகம் வழக்கறிஞராக பணியை தொடர்ந்தார். அவருடைய திறமையான வாதத்தின் காரணமாக அரசு தரப்பு வழக்கறிஞராக சிறப்பாக பணியாற்றி பல்வேறு வழக்குகளில் திறமையாக வாதிட்டு பல்வேறு சிறப்பான தீர்ப்புகளை பெற்று தந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக மற்றும் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சிறப்பாக பணியாற்றி பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இப்படி சட்டத்துறையில் கடந்த 50 ஆண்டுகளை கடந்து சிறப்பாக பணியாற்றிய மைக்கும் தற்போது டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நீதியரசர் கற்பகவிநாயகம் மரக்கன்றுகளை நட்டு ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் புதிய ஆடைகளை வழங்கி தலைமை உரையாற்றி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இன்று இருக்கும் இளைய தலைமுறையினர் தன்னம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடி தங்களது திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி அடைய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.


இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர். கே. குமார் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் தலைவர் கே. எம். தண்டபாணி கலந்து கொண்டு நீதியரசர் கற்பகவிநாயகத்தின் வாழ்க்கை மற்றும் அவர் வழங்கிய தீர்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் கௌரவ தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞருமான ரோட்டேரியன் சுந்தரவடிவேல், பொதுச்செயலாளர் முனைவர் சுப்பிரமணியம், மாநில தலைவர் ஆர். ராஜேஷ் குமார், துணைத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, எஸ். என். பாலசுப்பிரமணியன் மாநில மகளிர் அணி தலைவி லதா அர்ஜுனன், துணைத்தலைவர் வழக்கறிஞர் சுந்தரபாலன், துணைத்தலைவரும் முன்னாள் காவல் உதவி ஆணையருமான கே.ராமச்சந்திரன், துணைத்தலைவர் வழக்கறிஞர் கே. ஜெயப்பிரகாஷ், துணை செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேஷ், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், உதகை ஏ. தமிழ் வெங்கடேசன், அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும், நடிகருமான ஆர். ஏ. தாமஸ், திருப்பூர் மாவட்ட செயலாளரும் குறும்பட இயக்குனருமான குமார் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்கள்.


இவ்விழாவில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிர்வாகிகள் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள விளையாட்டு பயற்சியாளருமான சுரேஷ் பாபு, இணை செயலாளரும் தேசிய குத்துச்சண்டை விளையாட்டு வீரருமான எழில் மணி, வழக்கறிஞர் ஆறுமுகம் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணைசெயலாளர்அல்லி கொடி, அஸ்வின் ஜோன்ஸ் மற்றும் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் கந்தசாமி அசோக் குமார் படத்தின் கதாநாயகி வெண்மதி, நடிகைகள் மீனா வீரலெட்சுமி, திவ்யா, இசையமைப்பாளர் பாலகுமார் ஒளிப்பதிவாளர் யாசின், இயக்குனர் குமார் தங்கவேல் அசோசியட் டைரக்டரும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய விருது பெற்ற அச்சம் தவிர் குறும்பட குழுவினருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது சமீபத்தில் நீதியரசர் கற்பகவிநாயகத்தின் 50 ஆண்டு காலமாக சிறப்பாக சட்ட துறையில் பணிகளை செய்து வருவதற்காக பாரத் விருச்சுவல் யூனிவர்சிட்டி சார்பில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் பாலகிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் நீதியரசர் எம். கற்பகவிநாயகத்தின் சட்ட பணியை பாராட்டி இந்த 2023 ம் ஆண்டிற்கான தேசிய சட்ட தின விருதினை வழங்கி சிறப்பித்து வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story