கோவை மாநகராட்சியில் கம்யூனிஸ்ட், மதிமுகவிற்கு வார்டுகள் ஒதுக்கீடு

கோவை மாநகராட்சியில் கம்யூனிஸ்ட், மதிமுகவிற்கு வார்டுகள் ஒதுக்கீடு
X

கோவை மாநகராட்சி.

திமுக கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட், மதிமுகவிற்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் வார்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!