உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
X

அதிமுகவினர் போராட்டம்.

திமுகவினருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் செயல்படுவதாக புகார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலை நேர்மையாக நடத்திட தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 50 பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுகவினருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் செயல்படுவதாகவும், வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கொலுசு, ஹாட் பாக்ஸ், பணம் வினியோகம் செய்து வருவதாக குற்றச்சாட்டினர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் துணை ஆணையரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பாதுகாப்பிற்கு துணை இராணுவத்தினர் வரவழைக்க வேண்டும் மற்றும் வெளியூர் திமுகவினரை வெளியே அனுப்பும் வரை தர்ணா தொடரும் என திமுகவிற்கும், காவல்துறைக்கும் எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது