இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது: எஸ்.பி.வேலுமணி
மொழிப்போர் தியாகி களுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் தமிழ் மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன், அருண்குமார், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு, தியாகிகள் நடராசன், தாளமுத்து உடபட 12 தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில், அதிமுக, தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு எப்போதும் அஞ்சலி செலுத்தி உரிய மரியாதை வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த மொழி போரில் கோவை மாவட்ட முக்கிய பங்காற்றி இருப்பதாகவும், பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பல்வேறு போராட்டங்களை அண்ணா நடத்தியதால் திமுக ஆட்சி அமைந்ததாக தெரிவித்த அவர், அதனை தொடர்ந்து அதிமுக வீர மறவர்களுக்கு இப்போது வரை அஞ்சலி செலுத்தி வருவதாக கூறினார். தற்போது வரையிலும் அதிமுக இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் வீட்டில் அவரை களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகவே தற்போது பொறுப்பிலுள்ள அமைச்சரின் தூண்டுதலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக வெற்றி யை பாதிக்கவும் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காகவே சோதனை நடத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சரின் வீடுகளில் இருந்து தற்போது ஒன்றிய செயலாளர் வரை திமுக சோதனை நடத்தி வருவதாகவும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu