/* */

எஸ்.பி.வேலுமணி தலைமையில் கலெக்டரை சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

கோவையில் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.

HIGHLIGHTS

எஸ்.பி.வேலுமணி தலைமையில் கலெக்டரை சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
X

கோவை மாவட்ட ஆட்சியரிடம் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

முன்னாள் அமைச்சர் கோவை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் பி. ஆர். ஜி .அருண்குமார், அம்மன் கே. அர்ஜுனன், பொள்ளாச்சி ஜெயராமன் , அமுல்கந்தசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் .

மனு அளித்த பின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டியில்

சட்டமன்றதொகுதியில் இருக்கும் 10 பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க கடிதம் வந்தது . அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இருக்கும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளோம். இதில் அதிகமான கோரிக்கைகள் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை. சாலைகள் மோசமாக இருப்பதால் பயணிக்க முடியாத நிலை இருக்கின்றது. இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வலியுறுத்தி இருக்கின்றோம்.


மாநகராட்சி சாலைகள் மோசமாக இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்ட500 சாலை பணிகளை இந்த அரசு ரத்து செய்தது. அந்த சாலைகள் போடப்பட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கிய மேம்பால பணிகளை வேகமாக செய்ய வேண்டும்.

வெள்ளலூர் பேருந்து நிலையம் அதே இடத்தில் தொடர வேண்டும். மெட்ரோ ரயில் திட்ட பணிகளை வேகப்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அனைத்து பணிகளும் வேகமாக முடிக்க வேண்டும். அத்திகடவு அவனாசி திட்டம் விரைவாக முடிக்க வேண்டும். அரசு நிர்வாகம் கோரிக்கைகளை கேட்டது. கொடுத்து இருக்கின்றோம்.

கோவையில் தண்ணீர் விநியோகம் சரியாக இல்லை. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த காலங்களில் அ.தி.மு..க அரசு கொடுத்து இருந்தது. இவ்வளவு திட்டம் கொண்டு வந்தாலும் இவற்றை அவர்கள் தொடர வேண்டும். இப்ப இருக்கின்ற அரசு ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது

வெள்ளலூர் பேருந்து நிலையம் 50 சதவீதம் கட்டிய நிலையில் உள்நோக்கத்தோடு நிறுத்தி இருக்கின்றனர். ஆட்சியரிடம் இந்த பணிகள் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த பேருந்து நிலையம் மக்களுக்கு அவசியமானது. ஏதோ காரணத்தால் நிறுத்தி இருக்கின்றனர்.எந்த காரணமாக இருந்தாலும் பேருந்து நிலையம் அதே இடத்தில் வர வேண்டும் என்றார்.

Updated On: 6 Sep 2022 11:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  6. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  7. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!