கோவையில் அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் முடக்கம்: எடப்பாடி பழனிசாமி

கோவையில் அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் முடக்கம்: எடப்பாடி பழனிசாமி
X

கோவையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Edappadi Palanisamy - கோவையில் அ.தி.மு.க. அரசின் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Edappadi Palanisamy -கோவையில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்திலும் நிலையத்திலிருந்து விழா நடைபெற்ற சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள மண்டபம் வரையிலும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. வினர் சாலை நெடுகிலும் திரண்டு மேல தாளங்கள் முழங்க எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசு இருந்தபோது கோவை மாவட்டத்திற்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.விடியா அரசு பொருப்பேற்ற பிறகு அ.தி.மு.க. செயல்படுத்தி வந்த திட்டங்களை முடக்கியது. கோவை மாநகராட்சியில் 500 பணிகள் ரூ. 150 கோடியில் போடப்பட்ட திட்டத்தை ரத்து செய்த அரசு தி.மு.க. அரசு.500 திட்டங்களை இதுவரை தி.மு.க. அரசு ரத்து செய்து உள்ளது.

தி.மு.க. இன்றைய தினம் ரூ. 44 கோடியில் 138 பணிகளுக்கு பணி ஆணை பிறப்பித்தும் 18 சதவீதம் கமிஷன் கேட்டதால் ஒப்பந்ததாரர்கள் பணியை எடுக்க முன்வரவில்லை.11 முறை டெண்டர் விட்டும் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுக்க முன்வரவில்லை. கோவை வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு ரூ. 160 கோடியில் 50 சதம் பணிகள் முடிவடைந்தும் திட்டத்தை கைவிட உள்ளனர்.

நேற்றைய தினம் வெள்ளளூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்றைய தினம் பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் மின்சார துறை அமைச்சர் கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

நீண்ட காலமாக கோவை மாநகர மக்களின் கோரிக்கையை ஏற்று அம்மா அரசு திட்டமிட்டு வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணி சட்டமன்றத்தில் பேசியபோது அமைச்சர் நேரு வெள்ளளூர் பேருந்து நிலைய பணி வைந்து விரைந்து முடிக்கப்படும் என வாக்குறுதியளித்தார்.

ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமானவர் எல். அன். டி அருகே ஏராளமான நிலத்தை வாங்கி குவித்துள்ளதால் பேருந்து நிலையம் மாற்றப்படும் என கூறியுள்ளனர்.மக்களின் வரிப்பணம் இன்று வீணடிக்கப்படுகிறது.இந்த கட்டிடத்தை என்ன செய்ய போகிறார்கள் என தெரியவில்லை. விடியா அரசு அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகிறது.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம் கோவை மாநகராட்சியில் நடத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டம் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது.அதை தற்போது கிடப்பில் போட்டுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி,அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.நான்கு மாதத்திற்கு முன் நிறைவேற்றப்பட வேண்டிய அத்திக்கடவு -அவினாசி திட்டம். ஆனால் தற்போது பணி தாமதம் காரணமாக மேட்டூர் அணை மற்றும் பவானி அணை உபரி நீர் வீணாகி கடலில் கலந்துள்ளது. விடியா அரசின் மெத்தன போக்கு காரணமாக பருவ மழை நீர் வீணாகியுள்ளது. எந்த திட்டத்தையும் இவர்கள் சரிவர நிறைவேற்றவில்லை.கோவை மேற்கு புறவழிசாலை நிலம் எடுப்பு பணி துவங்கப்பட்டு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.750 கோடியில் நடைமுறைப்படுத்தப்பட இருந்த மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கான போதுமான நிதி ஒதுக்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது

ஆனைமலை நல்லாறு திட்டம் கேரள முதல்வரை சந்தித்து பேசினோம்.ஆனால் அதை செயல்படுத்த ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.பல பால பணிகள் செயல்படாமல் உள்ளது.அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்கள் மீள முடியாமல் இருக்கும் வேளையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு குறைப்பதாக கூறியுள்ளார் மின் அமைச்சர்.எனவே மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். வீட்டு வரி சொத்து வரி உயர்வு 100 முதல் 150 சதம் உயர்த்தப்பட்டுள்ளது.அது கைவிடப்பட வேண்டும்.தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.ஒட்டுமொத்த அரசியல் கட்சியும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என குரல் ஒலிக்கிறது.ஆனால் தமிழக முதலமைச்சருக்கு அது கேட்கவில்லை. அதற்கான பாடத்தை வருகின்ற தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள் என்றார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!