கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை:வாழை, தென்னை மரங்கள் சூறை

கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை:வாழை, தென்னை மரங்கள் சூறை
X

கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை தோட்டத்திற்குள் புகுந்து வாழைமரங்கள் தென்னை மரங்களை சூறையாடியது.

கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சூறையாடியது.

கோவை மதுக்கரை அடுத்த முருகன்பதி கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் நேற்று இரவு உலா வந்த ஒன்றை காட்டுயானை குழந்தைமணி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து 125 வாழை மரங்களையும் 3 தென்னை மரங்களையும் சூறையாடியது.

இது தொடர்பாக வனத்துறைக்கு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக்கூறும் விவசாயிகள், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானை நடமாட்டை கண்டறிந்து அவற்றை காட்டுக்குள் விரட்டியடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!