கோவையில் இன்று 59 பேர் வேட்பு மனுத்தாக்கல்

கோவையில் இன்று 59 பேர் வேட்பு மனுத்தாக்கல்
X

கோவை மாநகராட்சி அலுவலகம்.

கோவை மாவட்டத்தில் உள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 811 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட நேற்று வரை 35 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இன்று 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. கோவை மாநகராட்சியில் இன்று 8 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால், இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. பேரூராட்சிகளில் இன்று 31 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால், இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. நகராட்சிகளில் இன்று 20 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததால், இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!