கோவையில் 1.50 கோடி மோசடி: முன்னாள் எம்.எல்.ஏ., மருமகன் கைது

கோவையில் 1.50 கோடி மோசடி: முன்னாள் எம்.எல்.ஏ., மருமகன் கைது

அருண்பிரகாஷ்.

கோவையில் 1.50 கோடி மோசடி: முன்னாள் எம்.எல்.ஏ., மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (41). இவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகன் ஆவார். ரியல் எஸ்டேட் நிறுவனம், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பீளமேடு சித்ரா சசி அவென்யூ பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் என்பவருடைய மகள் சிந்துஜாவுடன் அருண்பிரகாஷ்ஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று சிந்துஜாவிடம் அருண்பிரகாஷ் கூறினார். இதனை நம்பிய சிந்துஜா தனது தந்தை செங்குட்டுவன் மூலம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் செங்குட்டுவன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அருண்பிரகாஷ் தன்னிடம் வாங்கிய பணத்தில் தொழில் துவங்கவில்லை எனலும், நாங்கள் பணத்தை திரும்ப கேட்ட போது வால்பாறையில் தேயிலை எஸ்டேட் விற்று பணத்தை தருவதாக கூறினார்.

மேலும் இரண்டு காசோலைகளை கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகள் பணமின்றி திரும்பி வந்தது. பணத்தை திரும்ப தராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அருண் பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி வழக்கில் கோவை தங்கம் மருமகன் கைதான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story