கோவை மாநகராட்சி மேயரின் வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி நிதி: அதிமுக புகார்
கோவை மாநகராட்சி மேயரின் வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும், தொடர்ந்து மாநகராட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாகவும், அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு.
கோவை மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவித்த நிலையில் அதில் கலந்து கொள்ள வந்த அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் மற்றும் கவுன்சிலர்கள் ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி மாமன்றத்தின் முன்பாக மேயரின் வீட்டை அழகுபடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியா? ஊழல் நடக்குதுங்கோ, ஊழல் நடக்குதுங்கோ, என்ற பதாகைகளை கையில் ஏந்தி மாமன்றத்தின் முன்பாக தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத் தொடரை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்
அதைத்தொடர்ந்து அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகராட்சி மக்களை விரட்டி விரட்டி வாங்கிய வரிகளை மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், கோவை மாநகராட்சி திமுக மேயர் தங்குவதற்கான வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக பராமரிப்பிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் கட்ட பராமரிப்புக்கு ஒரு கோடி என்றும் கோடிகளில் நிதி ஒதுக்கி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டிய பிரபாகரன். இவற்றிற்கெல்லாம் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளதா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திடீரென கோவை மத்திய மண்டலத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான 6 கோடி ரூபாய் வீட்டு வரியை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வரியை ரத்து செய்த வீடுகள் யாருடையது என்பது இதுவரை தெரியவில்லை, மேலும் இதனால் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரபாகரன் குற்றம் சுமத்தினார்
File name : cbe Corporation mayor meeting
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu