பெற்றோரிடம் கட்டாய கடிதம் பெறும் தனியார் பள்ளி: கோவையில் புகார்.

பெற்றோரிடம் கட்டாய கடிதம் பெறும் தனியார் பள்ளி: கோவையில் புகார்.
X

கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, கடிதம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது.

School News in Tamil - கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, கடிதம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது.

School News in Tamil -கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி, கடிதம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை அவினாசி சாலையில் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி உள்ளது. இங்கு, பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி "indemnity" ( எங்கள் குழந்தைகளுக்கு, பள்ளி வளாகத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல) என்ற படிவத்தில், கையெழுத்து வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளிகள் சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் "indemnity" படிவத்தை பெற்றோர்கள் கையெழுத்திட வேண்டும் என, கட்டாயபடுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மறுக்கும் பெறறோர், "TC" மாற்றுச்சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு, கூறப்படுகிறது.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், பள்ளியில் "indemnity" படிவம் வாங்குவது உண்மைதான்: ஆனால்,யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை, என்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!