தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்.பி. கிடைப்பார்கள்.. கோவையில் அண்ணாமலை பேச்சு…

தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்.பி. கிடைப்பார்கள்.. கோவையில் அண்ணாமலை பேச்சு…
X

மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை அண்ணாமலை வழங்கினார்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 எம்பிக்கள் கிடைப்பார்கள் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தேசத்தை இதயத்தில் வைத்து நடக்கும் கட்சி பாஜக. உடலில் சிறு குறைகளுடன் மனதில் எந்த குறையும் இல்லாதவர்களே கடவுளுக்கு மிகவும் நெருக்கத்தில் இருப்பவர்கள் ஆவர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்து உள்ளது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பி.க்கள் கிடைப்பர்கள் என்பது இலக்கு. தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஊழல் செய்து வருகிறார்கள். டீக்கடையில் எப்போது ரபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ அன்றைக்கு வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன்.

ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். 2 ஜி விவகாரம் எப்படி திமுகவை 10 ஆண்டுகள் ஆட்சியில் அமரவிடமால் செய்ததோ அதே நிலை மீண்டும் நிகழும். 70 ஆண்டுகளாக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு அமைச்சரும் இதை பற்றி பேச வேண்டும்.

பொதுமக்கள் திமுக ஊழல் பற்றி தெரிவிக்க ஒரு இணையதளம் தயார் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பினாமிகள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம். ஒரே நாளில் அரசியல் புரட்சி ஏற்படுத்த உள்ளோம். 2 லட்சம் கோடி ரூபாய் சொத்து திமுக குடும்பத்தினரிடம் உள்ளது.

முதல்வர் குடும்பம் பற்றி பேசும் தகுதியும், தைரியமும் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. 2 லட்சம் கோடியா, வாட்ச்சின் பில்லா? என்பது தெரிந்து விடும். பூத் கமிட்டி பிரதிநிதிகள் சிறப்பாக செயலாற்ற வேண்டும். அவர்கள் தான் நமக்கான வாக்குகளை உறுதி செய்பவர்கள்.

கையில் இருக்கும் பணத்தை இழந்து கட்சியை வளர்த்து வருகிறோம். நமது போராட்டங்கள் நம்மை மக்களிடம் அதிகம் கொண்டு சேர்க்கிறது. Do or die சூழலில் தமிழகத்தில் நாம் உள்ளோம். இதற்கு முடிவு கட்ட இந்த தலைமுறையால் முடியும். 2024 இல் திமுகவிற்கு முடிவுரை எழுதப்படும்.

மக்கள் மனசு பாஜக பக்கம் திரும்பிவிட்டது. சூழ்நிலைகளை வாக்குகளாக்க வேண்டும். உண்மையான மனிதர்களை நலத்திட்டங்களை வழங்கும் போது தான் பார்க்க முடியும். விரைவில் கோவையில் பொதுக்கூட்டம் நடைபெறும். 2024 இன் நிலை பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் பெறும்.

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு கிடைத்துவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சி நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்பது எங்களுக்கு தெரியும். அதை நாங்கள்.பார்த்துக் கொள்கிறோம் என அண்ணாமலை பேசினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil