தமிழகத்தின் நம்பர்-1 நடிகர் முதல்வர் ஸ்டாலின்.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்...

தமிழகத்தின் நம்பர்-1 நடிகர் முதல்வர் ஸ்டாலின்.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்...
X

கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

தமிழகத்தின் நம்பர்-1 நடிகர் ஸ்டாலின்தான் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கோவை அன்னூர் பகுதியில் விவசாய நிலங்கள் டிட்கோ மூலம் கையகபடுத்தும் விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்திருந்தது. தற்போது, தமிழக அரசு 1630 ஏக்கர் தரிசு நிலம் மட்டும் டிட்கோ மூலம் எடுத்து கொள்ளும் எனவும், மீதி இடத்தை விவசாயிகள் கொடுத்தால் மட்டுமே எடுத்து கொள்வோம் என கூறியுள்ள அரசின் நடவடிக்கையினை பாஜக வரவேற்கின்றது. ஏற்கெனவே வெளியிட்ட அரசாணையை தளர்த்தி அரசு அறிவிக்க வேண்டும்.

அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் ராசாவிற்கும் பிரச்சினை இல்லை. அண்ணாமலைக்கும் ஊழல்வாதிகளுக்கும்தான் பிரச்சினை. அன்னூர் பகுதி விவசாயிகளின் கருத்தை கேட்டு விட்டு அடுத்த நடவடிக்கை இருக்கும். சூலூர் வாரப்பட்டியில் போராடும் விவசாயிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கபடும்.

கிணத்துகடவு பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை தொடர்பாக அடுத்தகட்டமாக பாஜக போராட்டம் நடத்தும். ஆவினில் ஆரஞ்ச் கலர் பால் பாக்கெட் விலையை உயர்த்திய பிறகு மொத்தமாக 5000 லிட்டர் பால் விற்பனை குறைந்து உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொழில்பேட்டையில் 20 வருடத்திற்கு முன்பு திமுக எடுத்த 2000 ஏக்கர் நிலம் இன்னமும் பயன்படுத்தபடவில்லை. அதை முதலில் பயன்படுத்த வேண்டும். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு என்ஐஏ வசம் சென்ற பிறகு வழக்கு விசாரணை திருபத்திகரமாக இருக்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியும் அடுத்து அரசியலுக்கு வர வேண்டும் என திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவிதான் உதயநிதிக்கு கொடுத்து இருக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

திமுக - பாஜக கூட்டணி அமைய போகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவில் இருப்பவர்களால்தான் கூட்டணி பற்றி கருத்து சொல்ல முடியும். வரும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் மோடிக்கான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதம் இருக்கின்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை பாஜக தான். தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பார்களில் ஸ்பிரிங் என்ற நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யபடுகின்றது. இதுவும் திமுகவிற்கு வேண்டப்பட்ட குடும்பத்தினர் நடத்துவதுதான். தமிழகத்தின் நம்பர்-1 நடிகர் ஸ்டாலின்தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!