கோவையில் இருந்து பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்
தென்னக ரயில்வே சார்பில் ஆன்மிக தலங்களுக்கு செல்ல சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அற்புதமான வரலாற்று இடங்களை பார்ப்பதற்காக பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் இயக்கப்பட்டு வருகிறது
சுற்றுலா வணிகத்தை ஊக்குவிக்கவும் ஈர்க்கவும், இந்திய ரயில்வே பாரத் கௌரவ் ரயில்களை அறிமுகப்படுத்தியது , அவை தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் மற்றும் தீம் அடிப்படையிலான சுற்றுகளில் இயக்கப்படும். ஆபரேட்டர்களுக்கு அதன் ரேக்குகள் மற்றும் உள்கட்டமைப்பின் "பயன்பாட்டு உரிமையை" வழங்கும் இந்தக் கொள்கையின் மூலம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளின் ஒரு பகுதியை ரயில்வே தாராளமயமாக்கி எளிமைப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு கோயம்புத்தூர் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் சாய்நகர் ஷீரடிக்கு முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது
இது தொடா்பாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவை ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெய்விகத் தலங்களுக்கு, வாசவி கன்னிகா பரமேஸ்வரி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வர ஜனவரி 26ஆம் தேதி காலை 4.30 மணிக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது..
இந்த சிறப்பு சுற்றுலா ரயில், கோவையில் புறப்பட்டு ஈரோடு, கரூா், திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை வழியாக சிம்மாசலம், அரசவல்லி, ஸ்ரீகூா்மம், அன்னவரம், புருத்திகா தேவி (சக்தி பீடம்), ஸ்ரீ பீமேஸ்வர சுவாமி, மாணிக்யாம்பா (சக்தி பீடம்), வாசவி கன்னிகா பரமேஸ்வரி உள்ளிட்ட ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோயில்களுக்கு சென்று கோவைக்கு திரும்பி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 7 நாள்கள் ரயில் பயணத்தின் மூலமாக இந்தக் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்தப் பயணத்துக்காக, இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 18002102991, 7305858585 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu