/* */

குமரிக்காடு வனப்பகுதியில் பாகுபலி யானை

பாகுபலி யானை நெல்லித்துறை வனப்பகுதிக்குட்பட்ட குமரிக்காடு பகுதியில் சுற்றி திரிகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

குமரிக்காடு வனப்பகுதியில் பாகுபலி யானை
X

பாகுபலி  யானை - கோப்புப்படம் 

கோவை மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை யானை சுற்றி திரிகிறது. இதனை பொதுமக்கள் செல்லமாக பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்த யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றியதை வனப்பணியாளர்கள் பார்த்தனர். இதபற்றிய தகவல் அறிந்ததும் யானையின் காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர், அந்த யானையை பிடிக்க முடிவு செய்தனர். வனத்துறை 2 குழுக்கள் அமைத்தும், மோப்பநாய்கள் உதவியுடன் யானையை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் பாகுபலி யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிவதற்காவும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காகவும் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். இதற்கு உதவியாக முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் வரழைக்கப்பட்டன.

அந்த யானைகள் உதவியுடன் பாகுபலி யானையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக யானையை தொடர்ந்து தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

தற்போது பாகுபலி யானையானது நெல்லித்துறை வனப்பகுதிக்குட்பட்ட குமரிக்காடு பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை அறிந்ததும் வனத்துறையினரும், கால்நடை மருத்துவ குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர்.

அங்கு யானையின் நிலைமையை கண்காணித்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை சரியான இடத்திற்கு வந்தவுடன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 25 Jun 2023 3:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்