ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் தேர்தல்: ஆட்சியர் அறிவிப்பு
ஆழியார் அணை
பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி. பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் (20-ம் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆழியாறு பாசன திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக சப்-கலெக்டர் பிரியங்கா செயல்படுவார்.
திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்.
காலை 10 மணி முதல் 10.30 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல் நடக்கிறது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் காலை 10.45 மணிக்கு வெளியிடப்படுகிறது.
11.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் உடனடியாக பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதில், திட்டக்குழு தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக 4 பகிர்மான குழு தலைவர்களும், அசல் தேர்தல் சான்றிதழுடன் வர வேண்டும்.
அதனைத் தொடர்ந்து திட்டக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெறும். இதில் ஓட்டுப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu