பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம்.. கோவையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி...

பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம்.. கோவையில் அன்புமணி ராமதாஸ் பேட்டி...
X

கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

2026 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என கோவையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற முதற்கட்ட முயற்சியை பசுமை தாயகம் மூலம் எடுக்கிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம். அனைவரும் ஒன்று சேர வேண்டும். நொய்யல் நன்றாக இருந்தால்தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும் .நொய்யல் ஆற்றில் நான்கரை லட்சம் ஏக்கர் ஒரு காலத்தில் பாசனம் செய்தார்கள்.

இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். நொய்யலை மீட்டெடுப்பதற்கு முன் அதை தொடங்குகின்ற காடுகளை மீட்டெடுக்க வேண்டும். அனைத்து கழிவுகளும் நேரடியாக நொய்யலுக்கு போகிறது. சாயக்கழிவுகளுக்கு கணக்கே கிடையாது. தென் கொரியா மற்றும் லண்டனில் இதுபோன்ற பாதிக்கப்பட்ட நதிகளை மீட்டெடுத்து உள்ளனர். அதேபோல மீட்டெடுக்க வேண்டும்.

இந்த நீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். வேண்டியவர்கள் என்று பார்க்க கூடாது. காலநிலை மாற்றம் பெரிய சவாலாக இருக்கும். பாரம்பரிய நீரை மீட்டெடுக்க வாருங்கள். நொய்யல் ஆற்றுக்கும் சோழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தூர் வருவதில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் நடந்து வருகிறது.

தமிழகத்தில் ஆளுநரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும். ஆளுநரும் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். வேறுவிதமான அரசியலில் ஈடுபடக் கூடாது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்னை உள்ளன. அதை விட்டு தமிழ்நாடா, தமிழகமா, மத்திய அரசா, ஒன்றிய அரச என இருக்க கூடாது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல குடும்பங்கள் நடுவீதிக்கு வருகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை. ஏன் ஆளுநர் கையெழுத்து போடவில்லை. ஆளுநர் அதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடா தமிழகமா என்பது ஆளுநரின் வேலை கிடையாது. சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பு ஆளுநர் வெளியேறியது மரபுக்கு மீறிய செயல்.

2026 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான வியூகங்களை நாடாளுமன்றத் தேர்தலில் அமைப்போம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நிலைப்பாடு அறிவிப்போம். கேரளா அரசு தீவிரமாக டிஜிட்டல் சர்வேயில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பாதிப்பு தமிழகத்திற்கு வரும். தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இதில் இரு மாநில பிரச்சினைகள் வரும். இருவரும் சேர்ந்து தான் சர்வே பண்ண வேண்டும். தமிழக அரசு கேரளாவுக்கு குழு அமைத்து நடுநிலையான சூழல் உருவாக்க வேண்டும்.

பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அறிவித்ததை குடும் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது சாத்தியம். தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து 6 அடி கரும்பு தான் கொள்முதல் செய்யப்படும் என்ற முடிவை மாற்ற வேண்டும். அதிக ரசாயனம் கலந்தால் தான் கரும்பு 6 அடி வரை வளரும். அது யாருக்கும் நல்லதல்ல. எனவே, விவசாயிகளிடம் எந்த நிலையில் கரும்பு உள்ளதோ அதை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!