கோவை குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு

கோவை குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு
X

 வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

கோவையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மதிவேந்தன் கோவை குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாடிவயல் யானைகள் முகாமை மேம்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.8 கோடி அறிவித்துள்ளார். கோழிக்கமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்துவதற்கும் ரூ.5 கோடி தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து கண்டு களிக்கும்படியும் இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்படியும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

மேலும் முதுமலை யானைகள் முகாமில் யானை பாகன்களுக்கும் உதவியாளர்களுக்கும், வீடு கட்டுவதற்கு ரூ.10 லட்சம் தரப்பட்டுள்ளது, மேலும் ஊக்கத் தொகையாக ஒரு லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வனத்துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு வனப்பகுதிகளை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்றவற்றிற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.

கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பாதைகளை சீரமைத்து தேவையான கழிப்பறை வசதிகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வனப்பகுதிக்குள் எந்தெந்த சாலைகளை சரி செய்ய முடியுமா அவற்றை சரி செய்வோம், மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!