தமிழக அரசைக் கண்டித்து கோவையில் டிசம்பர் 2-ந்தேதி அதிமுக உண்ணாவிரதம்.. எடப்பாடி பழனிசாமி துவக்கம்
கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டியளித்தார்.
கோவை மாவட்ட அதிமுக இதய தெய்வம் மாளிகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க தவறியதற்கும், மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவைகளை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், அருண் குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செல்வராஜ், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான வேலுமணி பேசியதாவது:
திமுக அரசைக் கண்டித்து கோவையில் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். தற்போதைய ஆட்சியர் தமிழகத்தில் எந்த வளர்ச்சி பணியும் கிடையாது.
மக்களுக்காக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாயிடம் சொன்னபோது உடனே நேரடியாக வருவதாக தெரிவித்தார். அதிமுகவை விட்டால் யாரும் இல்லை.எதிர்கட்சி தலைவராக எடப்பாடி சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
திமுகவை எதிர்க்க அதிமுக தான் உள்ளது. ஊடகங்கள் சில கட்சிகளுக்கு தூபம் போடுகின்றனர். அதிமுக எடப்பாடி பழனிசாயின் பின்னால் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்து முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்கிறார் எடப்பாடி பவனிசாமி.
தைரியமான கட்சி அதிமுக தான். எந்தக் கொம்பனும் அதிமுகவை தடுக்க முடியாது. அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வோம். தற்போதைய திமுக ஆட்சி குப்பை. வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. கோவையில் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஒரு லட்சம் பேர் வருவார்கள் என முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
தொடர்ந்து, வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக அரசால் அனைத்து சாலைகளும் பழுதடைந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த திட்டங்கள் செயல்படாமல் உள்ளது. மின் கட்டண உயர்வு ,சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து டிசம்பர் 2 ஆம் தேதி கோவையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
எப்போது கேட்டாலும் கோவை மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க 200 கோடி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கிறார். ஆனால் சாலைகளில் போக முடியவில்லை. அவராலேயே போக முடியவில்லை. தமிழக ஆளுநர் எந்த கட்சியையும் சாராதவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வேலுமணி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu