பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
X
பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கோவை மாநகர சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து, தமிழக சுகாதாரத்துறையின் உத்தரவின் பேரில் கேரள தமிழக எல்லைகள் வழியாக வரக்கூடிய வாகனங்களுக்கு கிருமிநாசினிகள் தெளித்து தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் நேற்று திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகவும் நோய்கள் பரவாமல் இருப்பதற்காகவும் கோவை மாநகர சுகாதாரத் துறையும் கோவை மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி ஊழியர்களும் கோவை மாநகர் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்து சுகாதாரத்தைப் பேணும் விதமாகவும், நோய் தொற்று பரவாமல் மக்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடைகள், ஆட்டு இறைச்சி கடைகள், மீன் விற்பனை அங்காடி போன்ற பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளானது முழுவீச்சில் நடந்து வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!