வேளாண் சட்டங்கள் வாபஸ்: பிரதமர் அறிவிப்புக்கு மு.க. ஸ்டாலின் வரவேற்பு

வேளாண் சட்டங்கள் வாபஸ்: பிரதமர் அறிவிப்புக்கு மு.க. ஸ்டாலின் வரவேற்பு
X
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக, தனது டிவிட்டர் பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில்மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா