தலைமைச் செயலகத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

தலைமைச் செயலகத்தில் 57 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
X

தமிழக முதல்வர் ஸ்டாலின்  (கோப்பு படம்)

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 57 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (23–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 48 நபர்களில், 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர், வனத்தொழில் பழகுநர், உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கு 154 நபர்களும், கருணை அடிப்படையில் 164 நபர்களும், என மொத்தம் 318 நபர்கள் பணிநிமயனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 308 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியிலிருந்து வனக்காவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, கள உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு மொத்தம் 167 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 48 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர்இன்றையதினம் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் விஜயந்திர சிங் மாலிக், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) மீதா பானர்ஜி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆர். கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!