நாயுடன் தான் நாடு திரும்புவேன்: 2 நாள் காத்திருந்து சென்னை திரும்பி மாணவி

தனது செல்லப்பிராணியுடன் கீர்த்தனா
உக்ரைனில் போர் நடந்து வரும் சூழலில் அங்கிருந்து மாணவர்களை மீட்கும் பணியில் கடந்த 26,ஆம் தேதியில் இருந்து அரசு ஈடுபட்டு வருகிறது.
போர் சூழல் காரணமாக அங்கிருந்து எப்படியாவது நாடு திரும்பினால் போதும் என அனைவரும் போராடி வரும் சூழலில் வந்தால் தன்னுடைய செல்ல பிராணியுடன் தான் நாடு திரும்புவேன் என காத்திருந்த மாணவி கீர்த்தனா இன்று சென்னை வந்தடைந்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த மாணவி கீர்த்தனா. இவர் உக்ரைனில் உள்ள உஸ்ராத் தேசிய மருத்துவ பல்கலை கழகத்தில் 5ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனில் ஒரு நாய்க்குட்டியை தான் வாங்கியதாகவும் மிகவும் பாசமாக அந்த நாய்க்குட்டி வளர்த்து வருவதாகவும் ஒரு நிமிடம் கூட தன்னுடைய நாய்க்குட்டி பிரிந்து இருக்காது என்றும், இதற்காகவே கொரோனா காலத்தில் கூட இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்கு வராமல் தான் அந்த நாயுடன் இருந்ததாக தெரிவித்தார்.
போர் சூழல் ஏற்பட்டவுடன் தன்னுடைய நாய்க்குட்டியை விட்டு வர தனக்கு முன் வரவில்லை என்றும், என்னை விட்டால் அவனுக்கு யாரும் இல்லை எனவே அவனுடன் நாடு திரும்ப முடிவு செய்து கிட்டத்தட்ட 5 நாட்கள் பஸ் மூலம் பயணம் செய்து ஹங்கேரி வந்ததாக தெரிவித்தார். அங்கு நாய்க்குட்டியை அழைத்து வர அனுமதிக்காத காரணத்தால் இரண்டு நாட்கள் காத்திருந்து, நாயை அழைத்து வர அனுமதித்த பின்னரே வந்ததாக கூறினார்.
எத்தனை நாய்க்குட்டி வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என பெற்றோர்கள் தெரிவித்தார்கள் இருப்பினும் இவனை அங்கு விட்டு விட்டு தனியாக வர விருப்பமில்லை என தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu