சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்
X

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மொளரியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பில் ஏணி போராட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மொளரியா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மொளரியா : மத்திய மாநில அரசுகளை பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டக்களத்தில் வீதியில் இறங்கி இருக்கிறோம்.

உருமாறிய மக்கள் நீதி மையம் மக்கள் இயக்கமாக போராட்டத்தில் இறங்கி இருக்கிறது எனவும் வரி மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அரசுகளால் ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

அண்மையில்  திமுகவில் பத்மபிரியா மற்றும் மகேந்திரன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு :

துரோகம் என்பதை தலைவர் அன்றே குறிப்பிட்டிருந்தார், யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள் அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கி பிற கட்சியில் இணைந்துள்ளனர், இதை வன்மையாக கண்டிக்கிறோம். தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு நன்றியுடன் இருக்கட்டும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!