விருகம்பாக்கம் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

விருகம்பாக்கம் : தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
X

தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்த் இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார்.

இதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு ஏதும் இல்லை .வந்த தகவல் புரளி என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் போன் செய்த நபர் யார்? எதற்காக போன் செய்தார்? என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!