சென்னை மெட்ரோ ரயில் சேவை 7ம் தேதி வரை ரத்து: நிர்வாகம் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவை 7ம் தேதி வரை ரத்து: நிர்வாகம் அறிவிப்பு!
X

சென்னை மெட்ரோ ரயில்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. மெட்ரோ ரயில் சேவையும் கடந்த 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஊரடங்கை தமிழக அரசு வருகிற 7ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

அதன்படி சென்னை மெட்ரோ ரயில் சேவையும் வருகிற 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!